கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் எதிரே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து முடங்கியது. சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்ததால், ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். எதிர்ப்பு தெரிவித்தோரை போலீசார் கைது செய்தனர்.