கரூர் வெண்ணைமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அனைத்து கட்சியினருடன் இணைந்து கோவில் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு குவிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.