புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரை நிர்வாகத்துக்கு எதிராக மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்தவர்களிடம் கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் வம்பாகீரப்பாளையத்தில் பாண்டிமெரினா என்ற பெயரில் கடற்கரை உருவாக்கப்பட்டு, பொழுதுபோக்கு அம்சங்களுடன் வணிகவளாகம் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு படகு நிறுத்தும் தளம் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மறியல் செய்தனர்.அப்போது, அங்கு வந்த வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள தங்களுக்கு வழிவிடும்படி கேட்டதால் கைகலப்பு ஏற்பட்டது.