சென்னையில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான மசூதி தடுப்பு சுவரை இடித்த தனியார் கல்லூரியை கண்டித்து ஏராளமான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விருகம்பாக்கம் பகுதிக்குட்பட்ட ஆற்காடு சாலையில் மஸ்ஜிதே மதீனா மற்றும் மதரஸா மசூதியின் தடுப்பு சுவரை தனியார் கல்லூரி நிர்வாகம் ஜேசிபி கொண்டு இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.