அரக்கோணம் வட்டாட்சியர் ஸ்ரீதேவி சக பணியாளர்களிடம் ஒருமையில் பேசி, அநாகரிகமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டாட்சியராக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி என்பவர் பொறுப்பேற்று கொண்டார்.புதிதாக பொறுப்பேற்ற அவர் சக பணியாளர்களிடம் ஒருமையில் பேசுவதாகவும், அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதனால், வட்டாட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அலுவலகத்தின் கதவு, ஜன்னல்களை அடைத்து ஸ்ரீதேவி பேச்சுவார்த்தை நடத்தினார்.