காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூரில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், உச்சநீதிமன்ற கிளை தமிழகத்தில் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.