மதுரை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பதில் நடத் ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மதுரை மாநகராட்சியில் சொத்து வரியில் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் 200 கோடி ரூபாய் மட்டுமே ஊழல் நடந்திருப்பதாக கூறி தமிழக அரசு சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மாநகராட்சி மேயர் உள்பட பல்வேறு நபர்களுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், உண்மை தன்மையை வெளிக் கொண்டு வர இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.