சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியாக 505 கோடியே 27 லட்ச ரூபாயை பொதுமக்கள் செலுத்தியுள்ளனர். ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தியவர்கள் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ள நிலையில், அரையாண்டுக்கு ஒருமுறை ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் வீடு வீடாக சென்று வரி வசூல் செய்து வந்தனர்.