காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டுவரும் சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி வெகுவாக குறைந்து விட்டதாக வேதனை தெரிவித்தது. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியே இருக்காது என எச்சரித்தது.