பழனி கிரிவலப் பாதையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட எஸ்பி தனஜெயன் அறிவித்தார்.பழனி அடிவாரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கிரிவல பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது.இந்நிலையில் வரும் 13,14 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் கிரிவல பாதையில் ஊர்வலம் செல்ல இந்து அமைப்புகள் அனுமதி கோரியிருந்தனர்.இதற்கு நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி மாவட்ட எஸ்பி அனுமதி மறுத்தார்.