மதுவிலக்கு மாநாட்டிற்கு யாருக்கும் கடிதம் எழுதி அழைப்பு விடுக்கப்போவதில்லை என்றும், மதுவிலக்குக்கு ஆதரவான பொதுவான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிபர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் ஒரே நாடு ஒரே தேர்தலில் உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.