இடைக்கால ஜாமீன் கோரி பேராசிரியர் நிர்மலாதேவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், பேராசிரியர், ஆராய்ச்சி மாணவர் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி போலீஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டது. குற்றவாளிகளான பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்த நீதிமன்றம், தனக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏற்படையதல்ல என்று நிர்மலாதேவி மனு தாக்கல் செய்தார்.