சென்னை அருகே தனியார் சட்டக் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரி பேராசிரியர் ஸ்டாலின், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், முதலுதவி சிகிச்சை அளிக்கக்கூட கல்லூரியில் போதிய வசதி இல்லை எனக் கூறி, கல்லூரி கேட்டை பூட்டி 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.