தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பில் வழங்குவதற்காக, தேனி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யும் பணியை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் துவங்கியுள்ளனர். 6 அடி உயரம் கொண்ட முழு கரும்பு ஒன்று கடந்த ஆண்டு 26 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டு ஒரு ரூபாய் விலை உயர்த்தப்பட்டு 27 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் உரம் விலை உயர்வு, கூலி உயர்வு உள்ளிட்டவை காரணமாக சாகுபடி செலவு அதிகரித்துள்ளதால், அரசு வழங்கும் கொள்முதல் விலை போதுமானதாக இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.