நெல் விற்பனை செய்வதில் சிக்கல் : மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் காரணமாக, சிட்டா மற்றும் அடங்கல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி ஆகிய நான்கு தாலுகாக்களில் சுமார் ஒரு லட்சத்து 73 ஆயிரம் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய 184 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சிட்டா அடங்கல் இல்லாமல் நெல் விற்பனை செய்வதில் சிக்கல் உள்ளதால், மாற்று அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். Related Link 10க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்து கிடந்ததால் அதிர்ச்சி