28 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட கராத்தே போட்டி பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் தினங்கள் நடைபெறுகிறது இப்போட்டியை திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்க சேர்மன் திரு.லட்சுமி காந்தன் அவர்கள் குத்துவிளக்கேற்றி போட்டியை துவக்கி வைத்தார். மாவட்ட முழுவதிலும் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பல்வேறு எடை பிரிவுகள் மற்றும் தனி பிரிவுகளில் இரண்டு நாட்களாக போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மற்றும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ திரு T. J கோவிந்தராஜன் ஆகியோர் பரிசுகள் வழங்கினார். தொழில்நுட்ப இயக்குனர் விஜயராகவன் சங்க நிர்வாகிகள் தலைவர், ராஜா செயலாளர் தக்ஷிணாமூர்த்தி பொருளாளர் தனசேகரன் ஆகியோர் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்தனர்.