தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ரமலான் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. இராஜகிரி முஸ்லிம் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற சிறப்பு ரமலான் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட மக்களுக்கு புடவை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.