தூத்துக்குடி மாவட்டம் ஆவல்நத்தம் கிராமத்தில் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர். கோவில்பட்டியில் இருந்து 11 மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு ஆவல்நத்தம் கிராமம் அருகே சென்ற வேன் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.