கரூரில் 14 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தனியார் பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். நெய்தலூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், வெண்ணைமலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.இவர், அதே பள்ளியில் படித்து வந்த 14 வயது மாணவிக்கு கடந்த நான்கு மாதங்களாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி, குழந்தைகள் பாதுகாப்புக்கான அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு ஆசிரியர் மீது புகார் அளித்ததாக தெரிகிறது.