கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தனியார் பள்ளி பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 9 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.ஊத்தங்கரையில் செயல்பட்டு வரும் தீரன் சின்னமலை தனியார் பள்ளி பேருந்து ஊத்தங்கரையிலிருந்து போச்சம்பள்ளி நோக்கி 30 மாணவர்களுடன் சென்றது.கெரிகேபள்ளி கேட் என்ற இடத்தில் சென்றபோது, மற்றொரு பள்ளி பேருந்து தீரன் சின்னமலை பள்ளி பேருந்தின் மீது மோதுவது போல் வந்ததால் அதன் ஓட்டுநர் பேருந்தை இடது புறமாக திருப்பியதாக கூறப்படுகிறது.இதில் பேருந்து அருகே இருந்த புளியமரத்தில் பலமாக மோதியது. இதில் மாணவர்கள் தூக்கி வீசப்பட்டதில் 9 பேர் படுகாயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் உடனடியாக மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.