கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் வரி செலுத்தாமலும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்தும் வந்த 18 ஆம்னி பேருந்துகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் 20 பேர் கொண்ட குழுவினர் ஒசூரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வரி செலுத்தாமல் இயக்கி வந்த 18 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் சுமார் 40 லட்சம் ரூபாய் வரி வசூலித்தனர்.