விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரத்தில், உரிய அங்கீகாரம் இல்லாமல் செவிலியர் கல்லூரி நடத்தி மாணவிகளை ஏமாற்றியதாக, அக்கல்லூரி தாளாளரான டிக்காக் ஜான்சன் கைது செய்யப்பட்டார்.இக்கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கப்படாததை அறிந்து, அங்கு படித்துவந்த மாணவிகள் சான்றிதழ்களை திரும்ப கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.