திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மேம்பால பணிக்காக வைக்கப்பட்டிருந்த மண் குவியல் மீது தனியார் சொகுசு பேருந்து மோதி கவிழ்ந்ததில் மூன்று குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 28 பயணிகளுடன் விஜயவாடாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மின்னூர் பகுதியில் விபத்தில் சிக்கியது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.