புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.ஈசிஆர் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள தனியார் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு சென்ற முதலமைச்சர் ரங்கசாமி, அதனை திறந்து வைத்துவிட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு விதமான பொழுதுபோக்கு தளங்களை பார்வையிட்டார். அப்போது கிரிக்கெட் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்ற அவருக்கு, எம்.எல்.ஏ கே.எஸ்.பி ரமேஷ் பந்து வீச அதனை பேட்டால் தூக்கி அடித்து மகிழ்ந்தார்.இதையும் படியுங்கள் : சாம்பியன்ஸ் கிரிக்கெட் இறுதி போட்டி - இந்தியா வெற்றி... இளைஞர்கள் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்