பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி, தனியார் மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. புதுக்கோட்டை கொத்தமங்கலத்தை சேர்ந்த இளமுருகன் மனைவி தனுசுவள்ளி, 2-வது பிரசவத்துக்காக கந்தவள்ளி என்கிற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த நிலையில் திடீரென உயிரிழந்தார்.