கோவை துடியலூரில் தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை, கழுத்தை அறுத்து கொலை செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீலட்சுமி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த தமிழ்ச்செல்வன், தனது தாயாரின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அய்யன் கொல்லகொண்டானுக்குச் சென்றபோது, ஆனந்தி என்ற இளம்பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தமிழ்ச்செல்வன் வேறொரு பெண்ணை காதலித்ததாக கூறப்படும் நிலையில், இதனையறிந்த ஆனந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தியின் தந்தை மலைக்கனியும், அண்ணன் ராஜாராமும், மருத்துவமனை அருகேயுள்ள காலியிடத்தில் வைத்து தமிழ்ச்செல்வனை கொன்றுவிட்டு, பின்னர் பைக்கில் தப்பிச் சென்றனர்.