நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்திய போதும், கூடுதல் வட்டி கேட்டு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால், விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற விசைத்தறி கூலித் தொழிலாளி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடும்ப தேவைக்காக தனியார் நிதி நிறுவனத்தில் 15 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று மாத தவணை செலுத்தி வந்த விசைத்தறி தொழிலாளி சுந்தரம், சரிவர வேலை இல்லாததால் இடையில் தவணை தொகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் மீட்டர் வட்டி போட்டு 40 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு நெருக்கடி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.