செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பெண் தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். புக்கத்துறையில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் பெண்கள் பணி முடிந்து வேன் மூலம் மதுராந்தகம் நோக்கி சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.