ராணிப்பேட்டை அருகே தனியார் நிறுவனத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த நிலையில், உரிய இழப்பீடு வழங்க கோரி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழவேலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், வெங்கடாபுரத்தில் உள்ள "KAIZEN FOUNDRIES" நிறுவனத்தில் பணிபுரிந்த போது, திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தங்களுக்கு முறையாக நிர்வாகம் தகவல் கொடுக்கவில்லை என கூறி, இளைஞரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.