மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியார் கல்லூரி மாணவனை கொலை செய்ததாக, மற்றொரு தனியார் கல்லூரி மாணவன் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலூரை சேர்ந்த கிஷோர், தனது நண்பரான ஸ்ரீதருடன் சேர்ந்து, வீரபத்திரன்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவரான பாண்டிக்குமரனை கொலை செய்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.