கிருஷ்ணகிரி மாவட்டம் தொகரப்பள்ளி காப்புக்காடு பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், பேருந்தில் பயணித்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 21 பேர் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒசூர் வசந்த் நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 53 பேர், உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தனியார் பேருந்தில் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, தொகரப்பள்ளி அருகே வளைவில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.