கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, தனியார் பேருந்து சாலையில் இருந்து இறங்கி பள்ளத்தில் கவிழ்ந்து நின்றது. அதில் பயணம் செய்த 40 -க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். காட்டு நெமிலி அருகே பேருந்து சென்றபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகன ஓட்டி திடீரென சாலையை குறுக்கிட்டதால், அவர் மீது மோதாமலிருக்க பேருந்தை பள்ளத்தில் இறக்கியுள்ளார்.