சிவகங்கை அருகே தனியார் ஆம்புலன்ஸ் பத்து அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் செவிலியர் உயிரிழந்த நிலையில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். தேவகோட்டையில் செயல்பட்டுவரும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸில் ஓட்டுநர் பெரியண்ணன் மற்றும் செவிலியர் மாலா ஆகியோர் நோயாளி ஒருவரை மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு மீண்டும் திருப்பியுள்ளனர். அப்போது கண்டனிப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.