கேரள மாநிலம் திருச்சூர் அருகே விய்யூர் சிறையில் அடைக்க அழைத்து செல்லப்பட்ட கைதி தப்பி ஓடிய நிலையில், பணியில் அலட்சியமாக இருந்ததாக மூன்று போலீசாரை பணியிடை நீக்கம் செய்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். கடையநல்லூரை சேர்ந்த பாலமுருகன் மீது தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் பல குற்ற வழக்குகள் உள்ளன. விய்யூர் சிறையில் இருந்த பாலமுருகன், பந்தல்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் பாலமுருகனை ஆஜர்படுத்திய போலீசார், மீண்டும் சிறைக்கு அழைத்து சென்றனர். அப்போது இயற்கை உபாதை கழிக்க வேண்டும் எனக் கூறி பாலமுருகன் தப்பினார்.