சென்னை புழல் சிறையில் அறைக்குள் செல்ல மறுத்ததை தட்டிக்கேட்ட சிறை காவலர் மீது கைதி தாக்குதல் நடத்தினார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஜய் என்பவர், சிறை அறைக்குள் செல்ல மறுத்து வெளியே சுற்றியுள்ளார். இதை தட்டிக்கேட்ட சிறை காவலர் பிரபாகரனை அஜய் தாக்கியதால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.