பிரதமர் மோடியின் பிறந்த நாள் பரிசாக, 20 அடி உருவப் படத்தை வரைந்து மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் உள்ள கிரிசார் அகடாமி சிபிஎஸ்சி தனியார் பள்ளியில், 20 அடியில் பிரதமர் மோடி உருவப்படத்தை 3 மணி நேரத்தில் 75 பள்ளி மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து வரைந்து அசத்தினர். இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத நெல், வைக்கோல், மரத்தூள், தென்னை கழிவுகளால் உருவப்படத்தை வரைந்த பின்பு, அதைச் சுற்றி நின்றவாறு பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி மாணவ மாணவிகளின் இந்த முயற்சியை ’தி கிங்டம் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழை வழங்கியது..