கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தில் பாஜக சார்பில், பிரதமரின் பிறந்த நாள் விழாவிற்காக, 5000 லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் வருகிற 17ஆம் தேதி, பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாளையொட்டி விளையாட்டு போட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொலவக்காளிபாளையத்தில் 17ஆம் தேதி பாஜக சார்பில், பொது மக்களுக்கு லட்டு வழங்க 5000 லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக, 60 கிலோ கடலைமாவு, 120 கிலோ சக்கரை, எண்ணெய், முந்திரி, திராட்சை கொண்டு லட்டு தயாரித்து வருகின்றனர்.