பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி விரைவில் திறக்கவுள்ளதையடுத்து ரயில்வே துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாம்பனில் புதிய ரயில் பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த நிலையில் அப்பணிகள் நிறைவடைந்தது. இந்த புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி இரண்டு வாரத்தில் திறக்கவுள்ளதை ஒட்டி, ஹெலிகாப்டர் இறங்கும் தளம், நிகழ்ச்சி நடைபெறும் இடம் உள்ளிட்டவற்றை ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.