திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையை சுற்றிலும் முட்புதர்கள் மண்டிக் கிடப்பதாகவும், மருத்துவக் கழிவுகளை மருத்துவமனைக்கு பின்புறத்திலேயே போட்டு எரிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.