மயிலாடுதுறை புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முடிவடையாமல் திறக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். இதனிடையே மயிலாடுதுறையில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட கட்டடத்தில் ஜன்னல்கள், தரை, கழிவறைகள், மின்சார வசதி, படிக்கட்டுகள் உள்ளிட்டவை முழுமையாக முடிக்கப்படமல் இருந்தது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதையும் படியுங்கள் : கட்டட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி சந்தனராஜ்... 3-வது மாடியில் இருந்து தவறி சிசிடிவி காட்சி