25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க வோளண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நியாய விலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் திருவாரூர் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடி சென்று பொருட்கள் வழங்குவதில் உள்ள சிக்கல்களை ஆராய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ள நிலையில், பயிர்க்கடன், நகைக்கடன் பெறுவதிலும், கூட்டுறவு சங்கங்களில் உரம் வாங்குவதிலும் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : தனியார் பேருந்தை திருடி சென்ற மர்ம நபர் - சிசிடிவி காட்சி சிசிடிவி காட்சிகளை வைத்து பேருந்தை மீட்ட போலீசார்