நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடியரசு தலைவர் வரவுள்ளதால் நடைபெற்ற கான்வாய் ஒத்திகையால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள 27 ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வர உள்ளார். இதனை முன்னிட்டு ஜனாதிபதி கான்வாய் ஒத்திகை நடைபெற்றது. மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் வேளையில் நடைபெற்ற ஒத்திகையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சில பெற்றோர் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.