மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இறந்தவர்களின் பெயரில் போலியாக ஆதார் கார்டு தயார் செய்து மனை பத்திரப்பதிவு செய்ததாக குற்றம்சாட்டி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலி ஆவணங்கள் மூலம் கிரைய பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.