மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடத்தில் தூய்மை செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு மே12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வெள்ளிக்கிழமை மாலை மதுரை வந்தடைந்தது. தொடர்ந்து மாநகராட்சி சார்பில் வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதியில் உள்ள தொட்டிக்கு வெள்ளையடிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. மேலும் வைகை கரையில் மண் கொட்டப்பட்டு அதனை சமப்படுத்தும் பணியும்.