தர்மபுரியில், இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்கும் பணியில், ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு புத்தாடை, பட்டாசுகளுடன் இனிப்பு, கார வகைகளும் இடம் பெறுவது வழக்கமாகும். இந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில், 50க்கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகளை தயார் செய்து அண்டை மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு, உற்பத்தியாளர்கள் அனுப்பி வைத்து வருகின்றனர். இந்தாண்டு அதிகப்படியான ஆர்டர் வந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.