நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தின்போது, அவரது பாதுகாவலர்கள் தேமுதிக தொண்டர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சார பயணமாக திருச்செங்கோடு சென்ற பிரேமலதா விஜயகாந்த், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க நடந்து சென்றபோது, அவரை பார்க்க கட்சித் தொண்டர்கள் முண்டியடித்ததால் பாதுகாவலர்கள் தாக்கினர்.