நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்த நாரீஸ்வரர் மலைக் கோவிலில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்தை தொடர்ந்து கோவில் பிரகாரங்களை சுற்றி வந்த அவருடன் பக்தர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் பரிமாறிய பிரேமலதா விஜயகாந்த், கோவில் காளைக்கு கீரை கட்டை ஊட்டி விட்டார்.