ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணிக்கு, அரசு அறிவித்த 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலையை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வழங்கினார். திருப்பூரில் இருந்து திருப்பதிக்கு சென்ற 4 மாத கர்ப்பிணிக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டதில் கருச்சிதைவு ஏற்பட்டது. ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அப்பெண்ணின் மருத்துவ செலவை அரசே ஏற்பதுடன், 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரிடம் வழங்கினார்.