சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள red box உணவகத்தில் ஆர்டர் செய்த வெஜ் நூடுல்ஸில், இறால் வால் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆழ்வார்பேட்டையை சேர்ந்த விஷ்வேஷ், வைஷாலி தம்பதி கடைக்கு சென்று விளக்கம் கேட்டதற்கு நஷ்டஈடாக 1,000 ரூபாய் தருவதாக ஊழியர்கள் நக்கலாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.