கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற சாமி ஊர்வலத்தில் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், அதனை தொடர்ந்து பஜனையும்,சிறுமிகளின் கோலாட்டமும் நடைபெற்றது.